ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் சின்னரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்..!
Djokovic has advanced to the final after defeating the defending champion Sinner
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்வெரேவை கடும் போராட்டத்திற்குப் பின் 5.30 மணி நேரம் தாக்குப்பிடித்து அல்காரஸ் வீழ்த்தியிருந்தார்.
02-வது அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்- இத்தாலி வீரரும் 2025 சாம்பியனுமான சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டை 3-6 என ஜோகோவிச் இழந்தார். ஆனால் 02-வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
தொடர்ந்து, 03-வது செட்டில் சின்னர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றினார். ஆனால், 04-வது செட்டை 6-4 னவும், 05-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 04 மணி நேரமும் 09 நிமிடங்களும் தேவைப்பட்டது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 01) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - அல்காரஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
English Summary
Djokovic has advanced to the final after defeating the defending champion Sinner