இன்னும் 02 அமாவாசைகளுக்கு பின் திமுகவின் ஆட்சிக்கு முடிவு; இபிஎஸ் உறுதி..! - Seithipunal
Seithipunal


எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் பொது கூட்டம் நடைபேறது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார் உதயநிதி. ஆனால், இப்போது காங்கிரஸ் கை நழுவிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளதால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்றதும், 10 நாள் கூட ஆட்சி நிற்காது என்றார்கள், ஆனால், சிறப்பான ஆட்சியை கொடுத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் 02 அமாவாசைகள் தான் உள்ளது. அதனோடு திமுகவின் ஆட்சிகாலம் முடியப்போகிறது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS asserts that the DMKs rule will end after two more new moon days


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->