ஒரே நாளில் உயிரிழந்த 75 வயது கணவன்! கோடீஸ்வரி ஆன மனைவி!
Ireland husband wife property
அயர்லாந்தின் ஆஃபாலி கவுண்டியில் வசித்த ஜோசப் க்ரோகன் (75), ஒரு வளமான நில உரிமையாளர்.
இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது வீட்டுப் பணியாளரான லிசா ஃபிளாஹெர்டியுடன் (50) ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
அந்த திருமணத்திற்குப் பின்னர், வெறும் 24 மணி நேரத்துக்குள் ஜோசப் உயிரிழந்தார். இதன் மூலம், லிசாவுக்கு ரூ.47 கோடி மதிப்பிலான (5.5 மில்லியன் யூரோ) சொத்துகள் உரிமையாக வந்தன.
இந்தத் தகவல் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமும் மரணமும் தங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என கூறிய அவர்கள், லிசா இந்தச் சொத்துகளைப் பெறக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
லிசா பணத்துக்காக திட்டமிட்டு, ஜோசப்பின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேசமயத்தில் லிசாவுடன் நெருக்கமானவர்கள் இந்தத் தொடர்பு 1991-இல், லிசா 16-வயதில் இருந்தபோதே தொடங்கியதாகவும், ஜோசப் அவரது வாழ்க்கையின் முக்கியமான பங்காக இருந்தார் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஜோசப்பின் மரணம் புற்றுநோயும், அதனுடன் தொடர்புடைய தொற்றுமுதலுமே காரணம் என மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது நண்பர்கள், லிசாவுக்கு அவரது சொத்துகளிலும் பெயரிலும் முழு உரிமை உள்ளதாக உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Ireland husband wife property