ஈரானின் நிலத்தடியில் மறைந்த யுரேனியம்...! - 'தோண்டி எடுப்போம்' என டிரம்ப் அதிரடி எச்சரிக்கை...!
Iran hidden uranium underground Trump warns We dig it up
ஈரானை மையமாகக் கொண்ட பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்கா தற்காலிகமாக போர் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தாலும், அடுத்தகட்ட திட்டங்களை அமைதியாக முன்னெடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையின் போது, ஈரானின் நிலத்தடியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பி-2 குண்டுகளில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் செயல்பாடுகள் நடைபெறாது என்றும், கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு அந்த நடவடிக்கைகள் தொடப்படவில்லை என்றும் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தக் கருத்துகள் குறித்து ஈரான் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, ஈரான் முழுமையாக அழிக்கப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்த டிரம்ப், பின்னர் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவந்ததன் பின்னணியில், அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் தற்காலிகமாக தணிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Iran hidden uranium underground Trump warns We dig it up