கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்கள்! துடிக்கும் பெற்றோர்கள்! பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? - Seithipunal
Seithipunal


இந்தியா-கனடா இடையே காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்டதால் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கன்னட பிரதமர், இந்த கொலையில் இந்திய ஏஜென்ட்கள் தொடர்பு கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

ஆனால் இந்தியா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்து அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்திய மாணவ, மாணவிகள் கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பகை அதிகரித்து வருவதால் மாணவர்கள் சிலர் கனடாவில் படிப்பை தொடரலாமா என யோசித்து வருகின்றனர். 

இது இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்விந்தர் சிங் தெரிவித்திருப்பதாவது, கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் என்னுடைய மகள் கனடாவுக்கு படிக்கச் சென்றார். 

தற்போது ஏற்பட்டுள்ள பகை என் மகளுக்கு கவலையை அளிக்கிறது. படிப்பில் அவரால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பஞ்சாப் மாநில பா.ஜனதா தலைவர் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் எளிதில் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளும் வகையில் உதவி மையம் அமைத்து தொலைபேசி எண்ணையும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காங்கிரஸ் எம்.பி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian students studying Canada parents worried


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->