இந்திய சினிமா பாடல்கள் FM ரேடியோகளில் தடை...! பாகிஸ்தானின் அதிரடி முடிவு...! - Seithipunal
Seithipunal


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதுமுள்ள பாகிஸ்தான் எஃப்எம்(FM ) வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் 'ஷகீல் மசூத்' அறிவித்தார்.மேலும், பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் 'அட்டா தரார்' இந்த முடிவைப் பாராட்டினார்.

அட்டா தரார்:

மேலும் அவர் தெரிவித்ததாவது,"PBA-வின் நடவடிக்கையை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு .இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது இந்திய முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian cinema songs banned on FM radios Pakistan drastic decision


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->