இந்தியா – பாகிஸ்தான் உடனடி பேச்சுவார்த்தைகளை தொடங்கி மோதலை தடுக்க வேண்டும்:வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தீர்மானம்..!
India and Pakistan should start immediate talks Conflict should be prevented Gulf Cooperation Council resolution
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்துள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதலை தடுக்க வேண்டும் என்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜாசிம் அல் புதைவி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தெற்காசியாவில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை பார்க்கும் போது உறுப்பு நாடுகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வருகின்றன.

அத்துடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் உடனடி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்றும், போர் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், இதற்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் எனவும், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

மேலும், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. விதிகளுக்கு உட்பட்டு அமைதியான வழிகளில் பிரச்னை தீர்ப்பதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் உணர வேண்டும் எனவும், இவ்வாறு செய்யும் போது தான் தெற்காசியாவில் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஆதரிக்கும் என்றும், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்க்க சர்வதேச சமூகம் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று தனது உறுப்பு நாடுகளுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜாசிம் அல் புதைவி அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
India and Pakistan should start immediate talks Conflict should be prevented Gulf Cooperation Council resolution