மத்திய கிழக்குப் போரின் அடுத்தக் கட்டம்; 10 லட்சம் வீரர்களை களமிறக்கும் ஈரான்; அமெரிக்காவுக்கு சவாலா..?
In Retaliation to the US Iran Deploys 1 Million Troops
ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்த திட்டமிட்டது மட்டுமின்றி 10 ஆயிரம் வீரர்களை களமிறக்கியுள்ளது. எந்த நேரத்திலும் தரைவழித் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், ஈரான் எடுத்த அதிரடி முடிவுதான் அமெரிக்காவை மீண்டும் அதிர வைத்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் தாக்குதல் நடத்துவதால், மத்திய கிழக்கு நாடுகளில், பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்கள் போரை நிறுத்த சொல்லிகெஞ்சுவதாகவும் என்றும், நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.
ஆனால், இதனை முற்றிலும் மறுத்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் போரின் அடுத்தகட்டமாக, ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், இதை எதிர்கொள்ள, 10 லட்சத்திற்கும் அதிகமான படையினரை ஈரான் களம் இறக்கி வருவதாக அந்த நாட்டின் 'டான்சிம்' (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் புதியதாக ராணுவத்தில் சேர்க்கவும் ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதே நேரம் ஹார்முஸ் நீரிணை முடக்கம், உலக எரிபொருள் தட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாக, பல வீரர்கள் வளைகுடா நாடுகளின் ஹோட்டல்கள், அலுவலகங்களில் பதுங்கியுள்ளதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது, அவ்வாறு அவர்களை அங்கு தங்க அனுமதி அளித்தால் ஹோட்டல்களையே குறிவைத்து தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
English Summary
In Retaliation to the US Iran Deploys 1 Million Troops