பிஞ்சு உயிர் பறிபோன நிலையிலும் மௌனம் ஏன்...? - எச்.ராஜா கடும் கண்டனம்...!
Why there silence even after loss child life H Raja strongly condemns
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,"தவெக தொடங்கப்பட்ட காலத்தில் பரந்தூர் பிரச்சினைக்காக உடனடியாக களமிறங்கி ஆதரவு குரல் எழுப்பிய ஜோசப் விஜய், தற்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருக்கும் நிலையில் கோவையில் அரங்கேறியுள்ள பெண் குழந்தை படுகொலை சம்பவம் குறித்து மௌனம் கடைப்பிடிப்பது வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள், கொடூர வன்முறைகள் மற்றும் படுகொலை சம்பவங்களை முற்றிலும் கட்டுப்படுத்த குற்றவாளிகளுக்கு இரக்கமற்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க தமிழக அரசும், காவலர்களும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே நிலையான தீர்வாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Why there silence even after loss child life H Raja strongly condemns