சீறிப்பாய்ந்த காட்டாறு...! கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தின் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை பொழிந்து வருகிறது.இதன் தொடர்ச்சியான மழையால் அப்பகுதியில் உள்ள நீரோடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த நிலையில், காட்டாற்று வெள்ளத்தின் சீற்றத்தை காண மலை அடிவார கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் நீரோடை அருகே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் கணநேரத்தில் அடித்து செல்லப்பட்டான்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவல் அறிந்த காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர், வெள்ளத்தில் மாயமான சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

raging forest boy swept away by flood blink eye


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->