திடீர் பரபரப்பு...! மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் த.வெ.க. பிரமுகர் அதிரடி கைது...! - காவல்துறை அதிரடி...!
Sudden sensation TVK leader arrested case harassment student Police action
மதுரை பரவை அருகேயுள்ள கீழமாத்தூர் காலனியை சேர்ந்த உத்தமனின் மகன் கண்ணன் (21), பெயிண்டர் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கண்ணன், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி உரக்க சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் விரைந்து வந்த நிலையில், கண்ணன் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணி தலைமையிலான காவலர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட கண்ணன் த.வெ.க. தொடர்புடைய நிர்வாகி என தெரிவிக்கப்படுவது அந்த பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sudden sensation TVK leader arrested case harassment student Police action