களத்தில் இறங்கிய CM விஜய்...! சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கை!...! - அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!
CM Vijay enters fray Action put end law and order problem Urgent consultation officials
தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சவால்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த உயர்மட்ட ஆலோசனையில் தலைமை செயலாளர், உள்துறை செயலர், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழல், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக உருவாகும் வன்முறைச் செயல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குற்றச்சம்பவங்களை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 25 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் நடைபெற்றுள்ள இந்த அவசர ஆலோசனை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
CM Vijay enters fray Action put end law and order problem Urgent consultation officials