தினமும் கொலை செய்திகளா...? - தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கனிமொழி எம்.பி.பகீர் வேதனை...! - Seithipunal
Seithipunal


கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிகாலை பொழுது விடிந்தவுடன் இதுபோன்ற கொடூரச் செய்திகள் தொடர்ந்து வெளியாகும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் என சமூகத்தின் எந்த தரப்பினருக்கும் பாதுகாப்பு உணர்வு இல்லாத சூழல் மாநிலத்தில் உருவாகியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

மேலும், சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையை தற்போதைய அரசு முழுமையாக உணர்ந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are there murder news every day Kanimozhi MP distressed about law and order situation Tamil Nadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->