டிரம்ப்பின் புதிய அறிவிப்பு...! இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம்...! - வெள்ளை மாளிகை அதிரடி அறிக்கை!
Trump new announcement India can trust me 100 percent White House statement
அமெரிக்காவின் சுதந்திர தின 250-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொலைபேசி வாயிலாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா உறவு குறித்து பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இந்திய பிரதமர் மோடி ஒரு திறமையான மற்றும் வலிமையான தலைவர் என்றும், அவர் தனது நெருங்கிய நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மோடியின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன்” என பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நட்பு உறவு இதுவரை இல்லாத அளவிற்கு வலுவடைந்துள்ளதாகவும், இரு நாடுகளும் பல துறைகளில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியா எங்களையும் எங்கள் நாட்டையும் முழுமையாக நம்பலாம். எந்த சூழ்நிலையிலும் உதவி தேவைப்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும்” என்றும் அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முக்கிய நிகழ்வில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
English Summary
Trump new announcement India can trust me 100 percent White House statement