கள்ளக்காதல் வெறி..! கணவரைக் கொடூரமாகக் கொன்று புதைத்த மனைவி...! - நெஞ்சை உலுக்கும் பின்னணி என்ன தெரியுமா...?
Fake love obsession wife brutally killed and buried her husband Do you know what heartbreaking background
தெலுங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியை சேர்ந்த முத்தியம் ரெட்டி - கல்பனா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா, நாராயணகேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில், சிண்டு என்ற நபருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரும் நீண்ட நாட்களாக ரகசியமாக சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில், தங்களது உறவுக்கு கணவர் முத்தியம் ரெட்டி இடையூறாக இருப்பதாக எண்ணிய கல்பனா, அவரை கொலை செய்ய காதலன் சிண்டுவுடன் சேர்ந்து திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான சரியான தருணத்தை எதிர்நோக்கி இருந்த அவர்கள், சில நாட்களுக்கு முன்பு முத்தியம் ரெட்டியை கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கொலைக்குப் பின்னர், சடலத்தை அப்பகுதியில் உள்ள மைதானத்திற்கு கொண்டு சென்று, ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் எந்த சம்பவமும் நடைபெறாதது போல நடித்து, தனது கணவரை காணவில்லை என கல்பனா காவலர்களிடம் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய காவலர்கள், முத்தியம் ரெட்டியை தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையின் போது கல்பனாவின் கள்ளத்தொடர்பு குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவரை கொலை செய்ததை கல்பனா ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அவர் காட்டிய இடத்தில் புதைக்கப்பட்டிருந்த முத்தியம் ரெட்டியின் உடலை காவலர்கள் தோண்டி எடுத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கல்பனா மற்றும் அவரது காதலன் சிண்டு ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Fake love obsession wife brutally killed and buried her husband Do you know what heartbreaking background