குழந்தைகள் காப்பகத்தில் பற்றியெரிந்த தீ.. 15 குழந்தைகள் உடல்கருகி பலியான சோகம்.!! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணத்தின் ஹேடியன் நகரில் ஹென்ஷாப் பகுதி உள்ளது. இந்த பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகமானது செயல்பட்டு வருகிறது. 

இந்த காப்பகம் சுமார் இரண்டு மாடிகளை கொண்ட கட்டிடமாக இருந்து வந்த நிலையில், இந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இந்த காப்பகத்தின் முதல் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த குழந்தைகள் சுதாரிப்பதற்குள், தீ மளமளவென இரண்டவது தளத்திற்கும் பரவியதை அடுத்து, குழந்தைகள் அனைவரும் கட்டிடத்திற்கு உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர். 

இந்த தீவிபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த சமயத்தில், பல குழந்தைகளை தீக்காயத்துடன் மீட்ட நிலையில், தீவிபத்து மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனையில் 15 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico child safe house fire accident 15 child died


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal