திருநெல்வேலி-கோவை நெடுஞ்சாலையில் மினி வேன் பயங்கர விபத்து...! - 2 பெண்கள் உயிரிழப்பு... 9 பேர் காயம்!
mini van involved horrific accident Tirunelveli Coimbatore highway Two women dead 9 injured
திருநெல்வேலியிலிருந்து பெண்கள் உட்பட 11 கூலித்தொழிலாளிகளை ஏற்றிய மினி வேன் இன்று காலை கோவை மாவட்டம் பொள்ளாச்சி நோக்கி பயணித்த போது, விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கர விபத்தில் சிக்கியது.

அதிவேகத்தில் சென்ற வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச்சுவரை நேருக்கு நேர் மோதி சிதறியது. இந்த மோசமான விபத்தில், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தீவிர சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
மேலும், போலீசார் தற்போது விபத்து காரணங்களைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பயணிகள் பாதுகாப்புக்கு நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் மேம்பால கட்டமைப்புகளின் நிலையை மீண்டும் ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
English Summary
mini van involved horrific accident Tirunelveli Coimbatore highway Two women dead 9 injured