'டாக்ஸிக்’ டீசருக்குப் பிறகு புதிய சர்ச்சை...! நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள் கசிவு...!
Following Toxic teaser new controversy Details stars salaries leaked
பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 படங்களின் மூலம் இந்திய சினிமா அளவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நடிகர் யாஷ், தற்போது நடித்து முடித்துள்ள புதிய படம் ‘டாக்ஸிக்’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரம்மாண்டப் படத்தை திறமைமிக்க இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.

கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் டிராமாவில், நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பான கதை களத்துடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக மாறி, சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் கிளப்பியது. இந்த சூழலில், படத்தில் நடித்த நடிகர்–நடிகைகளின் சம்பள விவரங்கள் தற்போது கசிந்துள்ளதால், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஹீரோ யாஷ் இந்த படத்திற்கு ரூ.50 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்கா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு ரூ.18 கோடி, ‘நதியா’ வேடத்தில் நடிக்கும் கியாரா அத்வானிக்கு ரூ.5 கோடி, ‘மெலிசா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்துக்கு ரூ.5 கோடி, தாரா சுதாரியாவுக்கு ரூ.3 கோடி, மற்றும் ஹுமா குரேஷிக்கு ரூ.3 கோடி என நடிகை தரப்பின் சம்பள விவரங்களும் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Following Toxic teaser new controversy Details stars salaries leaked