சிகிச்சையளித்த மருத்துவரை பற்றிக்கொண்ட கரோனா.. சோதனையில் உறுதி.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் இருந்து பரவ துவங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் தங்களை தாங்களே லாக்டௌன் செய்துள்ளது. இதனால் பல அதிரடி கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் இந்த கட்டுப்பாடு சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தில் அமலாகிய நிலையில், நோயின் தீவிரம் குறைந்துள்ளதால் இது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், ஆரோக்கியமான நபர்கள் மட்டுமே அன்றாட பணிகளை செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பிற நாட்டில் இருந்து வந்த சீன நாட்டினை சார்ந்த 473 பேருக்கு கரோனா இருப்பதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களாக புதியதாக தொற்று ஏற்படாமல் இருக்கும் காரணத்தால், 5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஹூபேய் கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா முடிவு செய்தது. இதன்படி சில விமான நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டது. யூகான் மாகாண மக்கள் ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு மேலாக வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹூபேய் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த நிலையில், இது பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் சோகம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china corona virus doctor positive symptoms


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal