மசூதியில் குண்டு வெடித்த விவகாரம்..! 20 பேர் பரிதாப பலி.. அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. நாடுகள் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்தும்., அச்சுறுத்தலில் இருந்து தங்களது நாட்டின் மக்களை பாதுகாக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாட்டின் பாதுகாப்புபடை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பயங்கரவாதிகளின் இயக்கமானது., அமெரிக்க கூட்டுப் படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு உதவியுடன் அழிக்கப்பட்ட நிலையில்., தற்போது இவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நஞர்கார் மாகாணத்தில் உள்ள ஹகா மினா மாவட்டத்தின் ஜா தாரா நகரில் மசூதியில் தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த சமயத்தில்., சுமார் 2 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. 

மசூதியின் உள்ளேயே நடந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பரிதாபமாக பலியாகினர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி துடித்தனர். 

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Afghanistan masque bomb blast 20 peoples died


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal