அமைதிக்கான சின்னமாக அபுதாபியில் ஹிந்து கோவில்..! - Seithipunal
Seithipunal


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டப்பட்டு வரும் ஹிந்து கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம்'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கர் மேற்காசிய நாட்டின், ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபிக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அபுதாபியில் முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. 

இந்நிலையில், அங்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அமைச்சர், நேற்று அந்த கோவில் கட்டுமானத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, "இந்த கோவிலைக் கட்டுவதில் அனைத்து இந்தியர்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள். இந்த கோவில் 55 ஆயிரம் ச.மீ., நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. மத்திய கிழக்கு நாட்டில் அமையும் முதல் பாரம்பரிய ஹிந்து கோவில் இதுவாகும். இந்த கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம்" என்று தெரிவித்துளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hindu temple in Abu Dhabi as a symbol of peace, tolerance and harmony


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->