சீனாவில் நிலவும் கடும் பனி: சாலை விபத்தில் 17 பேர் பலி, 22 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் கடந்த ஒரு மாதமாக கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சியில் நன்சாங் கவுண்டி சாலைப் பகுதியில் பனி மூட்டத்தால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்நிலையில் இந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.

கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் வாகனங்களில் சொல்பவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வேகத்தை குறைத்து கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy snow in China killed 17 in road accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->