மலை உச்சியில் - 31 ஏக்கரில் கூகுள் (CEO) சுந்தர் பிச்சை வீடு.! பார்த்தா அசுந்து போயிடுவீங்க.! - Seithipunal
Seithipunal


கூகுள் இன்று எல்லோரின் அறிவுத் தேடலுக்கான இடமாக இருப்பது இந்த சர்ச் இஞ்சின் தான். கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு மின்னஞ்சலிலிருந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வரை  google நிறுவனம் தினம் தினம் வளர்ந்து கொண்டே செல்கிறது. அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவர்  தமிழர் என்பதில் நம் அனைவருக்குமே பெருமை. கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையின் வருமானம் மற்றும் அவரது சொத்து மதிப்புகளை பற்றி பார்ப்போம்.



2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை மென்பொருள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்  நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவி உயர்ந்தார்.

2022 ஆம் ஆண்டின் கணக்குப்படி சுந்தர் பிச்சை மொத்த ஊதியமாக 226 மில்லியன் அமெரிக்க டாலர்களை  பெற்றிருக்கிறார். இதன் இந்திய மதிப்பு 1800 கோடி ரூபாயாகும். இது கூகுளில் பணியாற்றும் சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட இன்னொரு மடங்கு அதிகம். 2018 ஆம் ஆண்டு  சுந்தர் பிச்சையின் பாதுகாப்பிற்காக மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பில் 9.8  கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.



இணையதளத்தில் வெளிவந்த தகவல்களின்படி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சாண்டா கிளாஸ் என்ற பகுதியில் தான் சுந்தர் பிச்சையின் வீடு அமைந்திருக்கிறது. லாஸ் ஆல்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அவரது வீடு சாண்டா கிளாரா பகுதியின் மலை உச்சியில் 31.17 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இது வீடா இல்லை  சுற்றுலாத்தலமா என்று கேட்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த வீட்டில் நீச்சல் குளம்,  உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பா, சோலார் பேனல்கள், லிப்ட்  மற்றும் வேலையாட்களின் குடியிருப்புகள் என மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Google CEO Sundar pichai luxurious house in California


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->