டொனால்டு ட்ரம்ப் மீது சிறுமி முன்வைத்த பகீர் பாலியல் புகார்கள்! - வெளியான புதிய ஆவணங்கள்
girl made outrageous allegations against Donald Trump New documents released
மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் சம்பந்தப்பட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தும் பாலியல் வழக்குகளில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் அடங்கிய ரகசியக் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தியது.

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் மூலமாகவே தனக்கு ட்ரம்ப் அறிமுகமானார் என்றும், அதைத் தொடர்ந்து அவர் தமக்கு பாலியல் ரீதியான சொல்லொணாத் துயரங்களை அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் எப்.பி.ஐ (FBI) அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பலகட்ட விசாரணைகளின் சாராம்சம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனக்கு 13 முதல் 15 வயது இருக்கும்போதே எப்ஸ்டீன் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவராலும் தான் வஞ்சிக்கப்பட்டதாக அந்தப் பெண் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, எப்ஸ்டீன் தன்னை நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்று ட்ரம்பிற்கு அறிமுகம் செய்தபோது நிகழ்ந்த அத்துமீறலைத் தடுக்கப் போராடி , தற்காப்பிற்காக அவரை கடித்ததாகவும், அதன் பிறகு தனக்கு மர்ம நபர்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் தரப்பு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில், அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய முக்கியத் தகவல்களைத் தற்போதைய நிர்வாகம் மறைப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கடுமையான அரசியல் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
English Summary
girl made outrageous allegations against Donald Trump New documents released