திடீரென வெடித்து சிதறிய கியாஸ் நிலையம் - தொழிலாளிகளின் நிலை என்ன?
gas station explosion in itali
தெற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள கியாஸ் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிந்ததால் திடீரென கியாஸ் நிலையம் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடத்தில் பயங்கர சத்தம் எழுந்ததுடன் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த தீ விபத்தில் கியாஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 45 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் படுகாயமடைந்த நபர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கியாஸ் வெடித்து சிதறியது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
gas station explosion in itali