Medical mistake! வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை...! அதிர்ந்து போன சிகிச்சை நபர்...! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் 46 வயதான மாரிமுத்து என்பவர். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும், மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இருக்கு கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்.இதனால் கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில், நேற்று காலை 8 மணியளவில் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு மருத்துவர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு, அவர் பகல் 12.45 மணிக்கு ஜெனரல் வார்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வலது காலுக்கு பதிலாக ஏன் இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு மருத்துவர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர்.மேலும், மாரிமுத்துவின் உறவினர்கள் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருத்தம் தெரிவித்த மருத்துவர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக தெரிவித்ததுடன் 10 நாளில் குணமாகி விடும், வருகிற திங்கட்கிழமையன்று வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாரிமுத்துவின் குடும்பத்தினர் மருத்துவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical mistake Surgery left leg instead right patient was shocked


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->