பீகாரில் திடுக்கிடும் சம்பவம்! மகனைக் கொன்ற பாணியில் தந்தையும் சுட்டுக்கொலை...!
Shocking incident in Bihar Father also shot dead same manner as his son
பீகார் மாநிலத்தில் பாட்னா நகரில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான 'கோபால் கெம்கா' என்பவர் மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டார். பாட்னாவின் காந்தி மைதான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள டுவின் டவர் சொசைட்டி பகுதியில் அவருடைய வீடு அமைந்துள்ளது.

மேலும், அவர் ஒரு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து நேற்றிரவு 11 மணியளவில் காவலர்களுக்கு தகவல் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய வளையத்திற்குள் கொண்டு வந்த காவலர்கள், சி.சி.டி.வி. பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை நகர எஸ்.பி. தீக்சா தெரிவித்துள்ளார்.மேலும், துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதில் ஒரு துப்பாக்கி குண்டு அந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தீக்சா தெரிவித்தார்.
இதில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய மகனான குஞ்சன் கெம்கா கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் ஹாஜிப்பூர் பகுதியில் தொழிற்சாலைக்கு வெளியே வைத்து, மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
அப்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், 6 ஆண்டுகள் கழித்து, கெம்கா சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென உடனடியாக தெரிய வரவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
English Summary
Shocking incident in Bihar Father also shot dead same manner as his son