'நவீன இத்தாலியின் தந்தை'திரு.கரிபால்டி அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


 'நவீன இத்தாலியின் தந்தை'திரு.கரிபால்டி அவர்கள் பிறந்ததினம்!.

 நவீன இத்தாலியின் தந்தையான ஜுஸபே கரிபால்டி (Giuseppe Garibaldi) 1807ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிரான்ஸின் நைஸ் நகரில் பிறந்தார்.

 இவர் ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கும் இயக்கத்தில் இணைந்து போராடினார். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர் படையின் புகழ், உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன. 

இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர் ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை. இவர் ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் 'ஹீரோ ஆஃப் டூ வேர்ல்ட்ஸ்' (Hero of the Two Worlds) என்று போற்றப்பட்டார்.

அசாதாரண ராணுவத்திறன், வீரம், முடிவெடுக்கும் ஆற்றல், செயல்திட்டம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற கரிபால்டி தனது 74வது வயதில் 1882 ஜூன் 2 ஆம் தேதி அன்று மறைந்தார்.

'பரிணாமவியல் ஆராய்ச்சியாளர்'திரு.எர்னஸ்ட் வால்டர் மயர் அவர்கள் பிறந்ததினம்!.

 20ஆம் நூற்றாண்டின் பரிணாமவியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் வால்டர் மயர் (Ernst Walter Mayr) 1904ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

 இவர் சிறுவயதிலிருந்தே பறவையியலில் ஆர்வம் கொண்டிருந்ததால் பல அரிய பறவை இனங்களையும் எளிதாக அடையாளம் காட்டி விடுவார். 

 இவர் தனது வாழ்நாளில் 26 புதுவகைப் பறவையினங்களுக்கும், 38 புதுவகை பூக்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார். 1942-ல் உயிரினங்களின் மரபியல், பரிணாம தொகுப்புகள் தொடர்பான இவரது முதல் புத்தகம் வெளிவந்தது.

 இவர் மொத்தம் 25 புத்தகங்களை எழுதியுள்ளார். தற்கால பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்கும், உயிரியியல் சிற்றின கோட்பாட்டு வளர்ச்சிக்கும் இவரது ஆராய்ச்சிகள் வழிவகுத்தன.

 பன்முகப் பரிமாணங்களை கொண்ட எர்னஸ்ட் மயர் தனது 100வது வயதில் 2005 பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father of Modern Italy Mr Garibaldis birthday


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->