காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – 20.59 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவடைகிறது. இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“காலை உணவுத் திட்டத்தில் இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாதிரி அரசு வரை பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்கி வருகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரும் 26-08-2025 முதல் நகர்ப்புறங்களிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதல்வர் காலை உணவுத் திட்டம் (CM Breakfast Scheme) விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தமிழகத்தில் முன்னதாகவே கிராமப்புறங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு, மாணவர்களின் பள்ளிச் சேர்க்கை விகிதம், வருகை விகிதம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளதை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

 “நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்!” என்று தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.

இந்த அறிவிப்பால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு கிடைப்பதோடு, அவர்கள் அறிவுத்திறன் வளர்ச்சிக்கும், உடல் நலத்திற்கும் பெரும் பலனளிக்கும் என கல்வியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Expansion of breakfast scheme 20 lakh students will benefit announces Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->