மக்களே குடையில்லாமல் வெளிய போகாதீங்க! கொட்டித்தீர்க்கபோகும் கனமழை!தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
Heavy rain is coming Chance of rain for 6 days in Tamil Nadu
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் வரும் 25-ந்தேதி வாக்கில், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளக் கடலோரப்பகுதிகளுக்கு அப்பாலுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், அடுத்த சில நாட்களுக்கு பொதுமக்கள் வானிலை மாற்றத்துக்கு தயாராக இருக்கும்படி வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Heavy rain is coming Chance of rain for 6 days in Tamil Nadu