ஆன்லைன் கேமிங் தடை – இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகும் ட்ரீம் 11!
Online gaming ban Dream11 withdraws from Indian cricket team jersey sponsorship
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா சட்டமாகியுள்ளதால், நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களுக்கு முழுமையான தடையிட்டுள்ளது.
இதன் தாக்கத்தில், Dream 11 மற்றும் MPL போன்ற பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்ட ட்ரீம் 11 நிறுவனம், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியக் கோப்பை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ட்ரீம் 11 விலகியதால், புதிய ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான ஏலங்களை நடத்த பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றம், இந்திய அணியின் வரவிருக்கும் போட்டிகளுக்கு முன்பாக ஸ்பான்சர்ஷிப் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Online gaming ban Dream11 withdraws from Indian cricket team jersey sponsorship