பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணிஆலய பெருவிழா..29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்! - Seithipunal
Seithipunal



 சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 53 வது ஆண்டு திருவிழா இந்த மாதம் ஆகஸ்டு 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை திரு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

 இந்த திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் மயிலை  உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து  நலம் பெரும் விழா ,பக்த சபைகள் விழா, நற்கருணை பெரு விழா, இளையோர் விழா, தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்அன்பிய பெருவிழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா,அன்னையின் பிறப்பு பெருவிழா மற்றும் சிறப்பு திருப்பலிகள் காலை மற்றும் இரவு  இரவு நேரங்களில் நடைபெற உள்ளது. 

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு மயிலை உயர் மதுரை மாவட்ட பேரையர் ஜார்ஜ் அந்தோணி அவர்கள் தலைமையில் ஏனைய குழுக்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி  நடத்துகின்றனர். அதனை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி யும்  இரவு திருப்பலியும் திருப்பலி முடிந்ததும் அன்னைக்கு முடி சூட்டு விழாவும் நடைபெற உள்ளது.

 இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை  அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் .பல்வேறு இடங்களில் பக்தர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட் ,குடிநீர் வசதி போன்றவர்கள் செய்யப்பட்டுள்ளன அது மட்டுமல்லாமல் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன .இந்த தகவலை பங்கு தந்தை திருத்தல அதிபர் அருளப்பா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The big festival of Besant Nagar Amma Velaankanni Alaya begins with the flag hoisting on the 29th


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->