பெண் போலீசிடம் நகை பறிப்பு - 2 வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்!
Jewelry theft from a woman Police stun 2 young men
திருவண்ணாமலையில் பெண் போலீசிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களிடம் இருந்து 4½ பவுன் நகை, பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை ,கலசபாக்கத்தை அடுத்த பாடகம் பகுதியைச் சேர்ந்த கலையரசி, திருவண்ணாமலை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.28 வயதான இவர் திருவண்ணாமலை வேங்கிக்கால் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் , கடந்த 19-ந்தேதி இரவில் பாடகம் கிராமத்திற்கு சென்றுவிட்டு திருவண்ணாமலைக்கு திரும்பி கொடிருந்தார் .
அப்போது திருவண்ணாமலை-வேலூர் சாலையில் திருவண்ணாமலை புரட்சி நகர் அருகில் பைக்கில் வந்த 2 பேர் திடீரென கலையரசி கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில், நகை பறிப்பில் ஈடுபட்டது கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி கடம்பை கிராமத்தை சேர்ந்த 22 வயதான ஷேக்ஹணீப் , 20 வயதான ஷரீப் என்பது தெரியவந்தது..
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் இருந்து 4½ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெண் போலீசிடம் வாலிபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Jewelry theft from a woman Police stun 2 young men