காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக போலி நாடகம் – குஜராத்தில் சிரியா நபர் கைது!காசாவுக்காக நிதி திரட்டி ஆடம்பர வாழ்க்கை நடத்தியது அம்பலம்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், காசா மக்களுக்கு நிதி திரட்டுகிறோம் என்று கூறி மசூதிகளில் நன்கொடை வசூலித்த சிரிய நாட்டு நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அலி மெகத் அல்-அசார் (23). இவர் உட்பட மேலும் மூன்று சிரியர்கள், கடந்த ஜூலை 22ஆம் தேதி டூரிஸ்ட் விசா மூலம் கொல்கத்தா வந்துள்ளனர். அங்கிருந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி அகமதாபாத் சென்றுள்ளனர்.

அங்கு ஓட்டலில் தங்கி, பல மசூதிகளில் சென்று “காசாவில் பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள்” எனக் கூறி நன்கொடை பெற்றுள்ளனர். அதற்காக காசா பகுதி மக்களின் பட்டினி காட்சிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பவற்றையும் காட்டியுள்ளனர்.

ஆனால், இந்த நிதி காசா மக்களுக்கு செல்லாமல், தாங்களே ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தியிருப்பது புலனாய்வில் தெரியவந்தது.

போலீசார் நடத்திய சோதனையில், அல்-அசாரிடம் இருந்து 3,600 அமெரிக்க டாலர் மற்றும் 25,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த நான்கு பேரும் உண்மையில் எந்த நோக்கத்திற்காக இந்தியா வந்துள்ளனர் என்பதை கண்டறிய, அகமதாபாத் கிரைம் பிராஞ்ச், குஜராத் பயங்கரவாத தடுப்பு படை (ATS), மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

 காசா மக்களின் துயரத்தை பேராசைக்காக பயன்படுத்திய இந்தச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fake drama of raising funds for Gaza people Syrian man arrested in Gujarat Ambalam raised funds for Gaza and lived a luxurious life


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->