நெஞ்சை பதறவைக்கும் கொடூர சம்பவம்! வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்து தீவைத்து கொளுத்திய கணவன்!
Heartbreaking incident Husband beats kicks and sets wife on fire for demanding dowry
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் அரக்கத்தனமான சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு வசித்து வந்த விபின் என்பவருக்கும் நிக்கி என்பவருக்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளான். ஆனால், திருமணத்திலிருந்து தொடர்ந்து வரதட்சணை கோரிக்கைகள் காரணமாக குடும்பத்திலே சச்சரவு நிலவி வந்தது.
நிக்கியின் குடும்பத்தினர் வழங்க வேண்டியதாகக் கூறப்பட்ட 35 லட்சம் ரூபாய் வரதட்சணை விவகாரம் கடந்த 21ஆம் தேதி கடுமையான தகராறாக மாறியது. இதன் போது, விபின் தனது தாயுடன் சேர்ந்து மனைவியை கடுமையாக தாக்கியதோடு, தலைமுடியை இழுத்து தாக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஆத்திரம் அடங்காமல், நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் பரவியதால் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
இதே வீட்டில் வசிக்கும் நிக்கியின் சகோதரி காஞ்சன் கூறுகையில், “மாமியார் குடும்பத்தினர் என் சகோதரியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். விபினுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பதால் நிக்கியை வீட்டிலிருந்து துரத்த விரும்பினர். சம்பவ தினம் நான் தடுத்தபோது என்னையும் தாக்கினர். அருகில் இருந்தாலும் சகோதரியை காப்பாற்ற முடியவில்லை” எனக் கூறி கண்கலங்கினார்.
மேலும், நிக்கியின் சிறு மகனும் “என் தாயின் மீது எதையோ ஊற்றினர். பின்னர் தீ வைத்தனர்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கணவன் விபினை கைது செய்து, பிற குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
ஒரு குடும்பத்தின் பேராசைக்காக, ஒரு பெண்ணின் உயிரை பறித்த இந்த சம்பவம், வரதட்சணை மரபின் கொடூரத்தை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியுள்ளது.
English Summary
Heartbreaking incident Husband beats kicks and sets wife on fire for demanding dowry