செனகல் : நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - 40 பேர் பலி.!
forty passangers died for bus accident in senegal
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டில் உள்ள கப்ரினி என்ற நகரில் நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நாற்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எண்பத்தேழு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வெளியான முதல்கட்ட விசாரணையில், பேருந்து சக்கரம் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்து சாலையின் எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
English Summary
forty passangers died for bus accident in senegal