இத்தாலியில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! 15 பேர் காயம் - Seithipunal
Seithipunal


இத்தாலியில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாலியின் மிலன் பகுதியில் தென்கிழக்கே உள்ள சான் கியுலியானோ மிலனீஸ் நகரில் ரசாயன பொருட்களை உற்பத்தி செய்யும் நைட்ரோல்சிமிகா நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீயானது மலமலவென கொழுந்துவிட்டு எரிந்து ஆலை முழுவதும் வேகமாக பரவியது.

மேலும் ஆலையில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறி, அப்பகுதி முழுவதும் அடர்த்தியான கரும்பு புகை சூழ்ந்தது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அவசர கால பணியாளர்கள் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தின் போது ஆலையில் இருந்த 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire broke out in Italy chemical plant


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->