ட்ரம்பின் பதிவாக இருந்தாலும் அகற்றப்படும்.. முகநூல் நிறுவனம் உச்சகட்ட எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அதிபர் ட்ரம்பிற்கும், ட்விட்டர் செயலி நிர்வாகத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டது. மேலும், சமீபத்தில் ட்ரம்பின் ட்விட்டர் பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கிய நிலையில், இதே விஷயத்தை முகநூல் செய்யவில்லை. 

இந்த சூழ்நிலையில், நேற்று அமெரிக்கா அதிபர் உட்பட யாராக இருந்தாலும், தவறான செய்திகள் குறித்த தகவலாக இருந்தால் அது திசை திருப்பம் என்று முகநூல் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக முகநூல் தலைமை நிர்வாக அதிகாரி ஜோகர் பெர்க் தெரிவிக்கையில், முகநூலில் இந்த விதிமுறை இன்று முதல் அமலில் வருகிறது. விதிமுறையினை மீறினால் அது யாராக இருந்தாலும், அதிபர் ட்ராம்பாக இருந்தாலும் அத்தகவல் முடக்கப்படும். 

அமெரிக்காவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவறான கருத்து கணிப்புகள் தொடர்பான தகவல் தடை செய்யப்படும். தேர்தல் நடைபெறவுள்ள 72 மணிநேரத்திற்கு முன்னதாக உள்ளூர் வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள் அகற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Facebook Team Announce wrong info


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->