ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் ஊழியர்கள் பணி நீக்கம்! 11 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தில் பணியில் இருந்த சுமார் 11 ஆயிரம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை அடைந்ததை அடுத்து செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் சமூக வலைதளங்கள் இறங்கியுள்ளன. அதன் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜெக்கர்பெர்க் தனது அறிக்கையில் "மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிக கடினமான சில மாற்றங்கள் தொடர்பான தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் குறிப்பிட்ட செலவினங்களை குறைக்கும் நோக்கத்தோடு முதல் காலாண்டு வரை பதிய பணி நியமனத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு பேஸ்புக் கூடுதல் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நான்கு மாத கால ஊதியம் வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook employees 11 thousand people lost jobs


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->