கத்தாரின் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்!
Explosion Qatar capital city Doha Israeli strike Hamas leaders
கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. இன்று (செப். 9) வான் வழியாக நடத்தப்பட்ட தீவிர தாக்குதலால் நகரம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், ஹமாஸ் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திங்கட்கிழமை இரு பாலஸ்தீனர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி என்ற வகையில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
தோஹாவில் ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Explosion Qatar capital city Doha Israeli strike Hamas leaders