ஊழல் குற்றச்சாட்டு: தாய்லாந்து முன்னாள் பிரதமரை கட்டாயம் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க உத்தரவு..!
Former Thai PM sentenced to one year in prison
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவை ஓராண்டு சிறையில் அடைக்கும்படி, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை பெற்று ஆறு மாதம் மருத்துவமனையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், மீண்டும் அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்தவர் தக்சின் ஷினவத்ரா. அவரது ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நலத்திட்டங்களில் ஊழல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால், கடந்த 2006-இல் அவரது ஆட்சிக்கு எதிராக நடந்த ராணுவ புரட்சியால் அவர் பதவியை விட்டு விலகி, வெளிநாடு தப்பிச் சென்றார். கடந்த, 2008-இல் மீண்டும் தாய்லாந்துக்கு திரும்பி தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள முயன்றார்.

அப்போது அவருக்கு அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்க முயன்ற நிலையில், மீண்டும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த நாடான தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா கடந்த 2023-இல் நாடு திரும்பினார்.
அவர் பாங்காக் வந்து இறங்கியதும், உடனடியாக கைது செய்யப்பட்டு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்க்கோர்ன் ஓராண்டாக குறைத்தார். அதனைத்தொடர்ந்து, உடல்நல பாதிப்பு என கூறி 06 மாதங்கள் மருத்துவமனையில் கழித்த நிலையில், அதன் பின் 2024-இல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் தண்டனை சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், 'மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்றும், இது சிறை விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இதனால் அவர் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்'என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இவருடைய மகள் பேடோங்டார்ன் ஷினவத்ரா, 2024 ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை பிரதமராக இருந்தார். நாட்டுக்கு எதிராகவும், ராணுவ தளபதி குறித்து அவதூறா பேசிய ஆடியோ வெளியான நிலையில், அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Former Thai PM sentenced to one year in prison