AI மார்பிங் புகைப்படங்கள் பரவி அதிர்ச்சி...! -டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய ஐஸ்வர்யா ராய்...!
AI morphing photos go viral shocking Aishwarya Rai moves Delhi High Court
இந்திய திரையுலகின் பிரபல நடிகை 'ஐஸ்வர்யா ராய்', தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது எனக் கோரி டெல்லி உயர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தபோது, “பல இணையதளங்கள் என் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி டி-ஷர்ட், பாத்திரங்கள், ஜார்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றன. மேலும், AI மூலம் உருவாக்கப்பட்ட மார்பிங் புகைப்படங்களும் பரவி வருகின்றன,” என்று நடிகையின் தரப்பு வாதிட்டது.
இதனை பதிவு செய்த உயர்நீதிமன்றம், அங்கீகாரம் இன்றி புகைப்படங்களைப் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தெரிவித்தது.
மேலும், வழக்கு விசாரணை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
AI morphing photos go viral shocking Aishwarya Rai moves Delhi High Court