உ.பி-யில் 15 வயது சிறுவன் கட்டாய மதமாற்றம்: மதரசா பள்ளி முதல்வர் அதிரடி கைது..!
Madrasa school principal arrested for forcibly converting 15 year old boy in UP
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 15 வயது சிறுவனை கட்டாய மதம் மாற்றி, பெயரையும் மாற்றிய மதரசா பள்ளியின் முதல்வர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள மன்சச்சாபர் என்ற பகுதியைச் சேர்ந்த ரப்ரி தேவி என்பவர், போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அதாவது, இலவச உணவு, உடை, தங்குமிடம், கல்வி தருவதாகக் கூறி, தனது 15 வயது மகன் விபின் குஷ்வாஹாவை, மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மதரசா பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹ்மான் அழைத்துச் சென்றதாகவும், ஆனால், அவர் தன் மகனை மூளைச்சலவை செய்து, முஸ்லிம் மதத்துக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மகனின் பெயரை நுார் ஆலம் என, மாற்றியுள்ளதாகவும், மகனை ஒப்படைக்கும்படி கேட்டால், தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, அவர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த புகாரின் படி, சட்ட விரோத மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மதரசா பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹ்மானை கைது செய்துள்ளனர். ரப்ரி தேவியின் கணவர் பாலியல் வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானவர்.
கோஹர்கட்டி கிராமத்தில் உள்ள மதரசா பள்ளி முன், அவர் சமீபத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்தே, அவரது மகன் விபின் குஷ்வாஹா கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Madrasa school principal arrested for forcibly converting 15 year old boy in UP