சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்திற்கு ரிவியூ சீமான்..!
Seeman is the reviewer of Sivakarthikeyan Madarasi
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல் உள்ளிட்ட பலர் நடிப்பில் மதராஸி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. முதல் 4 நாட்களில் ஓரளவு வசூல் வேட்டையை உலகளவில் ஈட்டியுள்ள நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
பெரும் எதிர்ப்ப்புடன் தியேட்டரில் ரிலீசான மதராஸி, முதல் நாளில் 13.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து இரண்டாம் நாளில் 12 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 10.65 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. ஆரம்பத்தில் அதிகம் வசூல் செய்த மதராஸி போக போக சரிவை கண்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த ’மதராஸி’ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
''ஏ.ஆர். முருகதாஸ் எழுதி இயக்கி அன்பு தம்பி சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் ''மதராஸி'' படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சிவாவுக்கு இது ஒரு முழு நீள ஆக்சன் படம். சண்டை காட்சிகளெல்லாம் ரொம்ப அசாத்தியமாக இருந்தது. வியப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்கு முன்பு வெளியான அமரன், இதுவரை அவர் நடித்து வெளியான படங்களிலிருந்து அவரை வேறுமாதிரி காண்பித்தது. அதன்பிறகு தம்பி சிவாவுக்கு இந்தப் படம் இன்னொரு பரிணாமமாக நான் உணர்கிறேன். என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மதராஸி படத்தில், ஒரு ஆக்சன் படத்திற்குள் நல்ல காதலை இணைத்து சொன்னது ரொம்ப புதியதாக இருந்தது. தம்பி அனிருத்தின் பங்களிப்பு அசாத்தியமானது. எல்லாருடைய பங்களிப்புமே ரொம்ப சிறப்பாக இருந்தது. குறிப்பாக சண்டை பயிற்ச்சியாளர்களை சொல்ல வேண்டும். ரொம்ப அருமையாக பண்ணிருக்கிறார்கள். எல்லாருக்கும் என்னுடைய பாராட்டுகள் என்று தற்போது சினிமா படத்திற்கும் சீமான் ரிவியூ கொடுத்துள்ளார்.
English Summary
Seeman is the reviewer of Sivakarthikeyan Madarasi