கலவர பூமியான நேபாளம்: ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: நேபாள எல்லையில் வசிப்பவர்கள் நம் நாட்டுக்குள் ஊருவும் அபாயம்..!
Military rule follows the violence in Nepal
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டம், 'ஜென் Z' போராட்டம் என்ற பெயரில் கலவரமாக மாறியுள்ளது.
கட்டுப்படுத்த முடியாத வன்முறையால் நேபாளஅரசு நிர்வாகம் ராணுவம் வசம் சென்றுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அது கலவரமாக மாறியுள்ளது. இதன்போது அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வீடு சூறையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
'ஜென் Z' போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவகலங்கள், அமைச்சர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்தத்தில் காட்மாண்டுவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி வீட்டில் இருந்த நிலையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இந்த கலவரத்தால் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், அந்நாட்டு மக்களை காக்கவும், பொது சொத்துக்களுக்கும் மேலும் இழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு தொடரும் கலவரத்தால் நேபாள எல்லையில் வசிப்பவர்கள் நம் நாட்டுக்குள் ஊருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டு பிரதமரை பதவி விலக வலியுறுத்திய நேபாளம் நாட்டு ராணுவ தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்தல், போராட்டக்காரர்கள் அமைதிகாக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, பிரதமர் சர்மா ஒலி, தனி விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary
Military rule follows the violence in Nepal