ட்ரம்பை பதவி நீக்கம் செய்து, ஜே.டி வான்ஸ் அதிபராக வேண்டும்: பரப்பரப்பை கிளம்பியுள்ள எலோன் மஸ்க்..!
Elon Musk has started a campaign to impeach Trump and make JD Vance president
அமெரிக்க அதிபர் பத்தியில் இருந்து டொனால்ட் டிரம்ப் நீக்கம் செய்யப்பட்டு, துணை அதிபராக உள்ள ஜே.டி., வான்ஸை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து பரபரைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், டிரம்புக்கு ஆதரவாக நிற்பதில் தான் பெருமைப்படுகிவதாக துணை அதிபர் ஜே.டி வான்ஸ் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிரம்ப், எலான் மஸ்க் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவகின்றனர். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
-jzdy3.png)
இந்நிலையில், டிரம்ப் உடனான மோதல் நிலையை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. தற்போது, டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, துணை அதிபராக உள்ள ஜே.டி., வான்ஸை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விருப்பத்தை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேசியாவைச் சேர்ந்த வலதுசாரி எழுத்தாளர் இயன் மைல்ஸ் சியோங் “டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவருக்குப் பதிலாக ஜே.டி. வான்ஸ் நியமிக்கப்பட வேண்டும்,' என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுருந்தார். இந்த பதிவிற்கு, 'ஆம்' என்று எலான் மஸ்க் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-ymd4z.png)
இது குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: அதிபர் டிரம்ப் பற்றி ஊடகங்கள் பல பொய்களைச் சொல்வதக்கவும், அதிலும் குறிப்பாக அவற்றில் மிகவும் வெளிப்படையானது என்னவென்றால், அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்லது முன்கோபம் கொண்டவர் என்று. அதிபர் டிரம்ப் தனது வாழ்நாளில் வேறு எந்த நபரையும் விட, தனக்கு அதிகமாகச் செய்துள்ளார். ஆகவே, அவருடன் நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Elon Musk has started a campaign to impeach Trump and make JD Vance president