ஆண்கள் விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.!
eight peoples died for gun shoot in south africa
ஆண்கள் விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.!
தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப்டவுன் நகரின் உமெஷி பகுதியில் ஆண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று அதிகாலை பன்னிரண்டு பேர் மதுக்குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் அறைக்கு சென்ற சிலர் மதுபோதையில் இருந்த அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அறையில் மதுக்குடித்துக்கொண்டிருந்தவர்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

அதேசமயம், துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக அறையில் இருந்து கீழே குதித்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
eight peoples died for gun shoot in south africa