மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லா பிளாசிட்டா டி மோரேலோஸ் கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மைக்கோகன் மாகாணத்தின் தென்கிழக்கு 46 கிலோ மீட்டர் தொலைவிலும், தரைப்பகுதியில் இருந்து 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கா நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கிய நிலையில், நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் மன்சானிலோவில் ஒரு வணிக வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மெக்சிகோ கடற்கரையின் சில பகுதிகளில் சுனாமி ஏற்பட கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Mexico


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->