அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்! பதறிய பாகிஸ்தான் மக்கள்...!
Earthquake early hours morning People of Pakistan are terrified
பாகிஸ்தான் நாட்டில் முல்தான் நகர் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இன்று அதிகாலையில் மக்கள் வழக்கம்போல் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர்.

அச்சமயம் திடீரென்று பூமி குலுங்கி நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்திலிருந்து சட்டென எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் வீட்டிலுள்ள பொருட்கள் குலுங்கி கீழே விழுந்தன.
மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சார்பில், ‛‛பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 என பதிவாகியுள்ளது.அதேபோல் ஜெர்மன் புவிஅறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில், ‛‛மத்திய பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் முல்தானுக்கு மேற்கே சுமார் 149 கி.மீ (92.5 மைல்) தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டு இருந்தது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Earthquake early hours morning People of Pakistan are terrified