மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த ட்ரம்பின் சகோதரி - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டன் பகுதியில், வசித்து வந்தவர் மேரியன் இவர் நேற்று (திங்கள் கிழமை) காலை தனது வீட்டின் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த நியூயார்க் நகர போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்து மேரியன் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேரியன் கார்டியக் அரெஸ்ட் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த சகோதரி ஆவர்.

இவர் கடந்த 1983-ம் ஆண்டு நியு ஜெர்சியில் பெடரல் ஜட்ஜாக இருந்து, கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கடந்த 2020-ம் ஆண்டு இவர் தனது சகோதரரும், அமெரிக்க அதிபருமாக இருந்த டொனால்ட் டிரம்ப் குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்திருந்தார். 

அந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், அவர் தன்னைக் கடைசி வரை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும் டிரம்புக்கு கோரிக்கை வைத்திருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

donald trumph sister died in new york


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->